
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெக்குமார் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர் காடுவெட்டி பிச்சையா, மாவட்ட கலை பிரிவு தலைவர் சித்திரை பாண்டியன், மாவட்டசெயற்குழு உறுப்பனிர்கள் வெற்றிவேல், ஆனந்த மூர்த்தி, கவிஞர் பூவிழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனர் சிறப்புரையாற்றினார். கருங்குளம் வட்டார செயலாளர் பண்டாரம் வரவேற்றார். சாத்தான்குளம் வட்டார தலைவர் லூர்து மணி, கருங்குளம் வட்டார தலைவர் ஆறுமுகம், ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன், சாயர்புரம் மணி, கருங்குளம் வட்£ர துணை தலைவர்கள் கந்தன், கந்தவேல், செலலப்பாண்டி, மாநில பேச்சாளர் பூல்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.