கால்வாய் கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து கிளார்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கூச்சல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கால்வாய் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வருபவர் காசி. இவர் மீது இந்த ஊரை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் பல்வேறு புகார் எழுப்பி வந்தார். இந்த நிலையில் கிராம சபை கூட்டம் கால்வாய் பஞ்சாயத்து திருவரங்கப்பட்டி பெருமாள் கோயில் அருகில் நடந்தது. பார்வையாளராக காசாளர் ராமசந்திரன் வந்திருந்தார். பஞ்சாயத்து கிளார்க் காசி தீர்மானம் வாசித்தார். இதற்கிடையில் அங்கு சிவசுப்பிரமணியன் வந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு முறையான பதிலை பஞ்சாயத்து கிளார்க் தரவில்லை. இதனால் அவர் மீது ஏற்கனவே கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். மேலும் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரை வைத்து கூட்டம் நடத்த வேண்டும், அது வரை கிராம சபை கூட்டத்தினை ஒத்தி வைக்கவேண்டும் என்றுகோரினர். அதன் பின் மக்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா கூறும் போது, ஏற்கனவே மனுதாரர் கொடுத்த புகாரை விசாரித்து வருகிறோம். இதற்கிடையில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனுதாரர் கூறினார். அப்படி இயற்ற இயலாது அதன் பின் கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. என்று அவர் கூறினார்.
கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
படம் உள்ளது