கால்வாய் கிராமத்தில் இடுகாட்டில் தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் 5000 ஜனத்தொகை கொண்டது. கருங்குளம் ஒன்றியத்துககு உள்பட்ட இந்த கிராமத்தில் இடுகாடு ஊருக்கு தென்புறம் உள்ளது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு தனியாக இடுகாடு ஊரின் வடபக்கம் வாய்க்கால் ஓரம் உள்ளது. சிலகுழந்தைகளை எரிக்க«ண்டிய சூழ்நிலை வரும்போது மககள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். மழைக்காலத்தில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே வாய்கால் கரை ஓரம் உள்ள இடுகாட்டில் கூரையுடன் கூடிய தகன மேடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கால்வாயை சேர்ந்த பொன்ரவி தூத்துகக்குடி மாவட்ட ஆட்சிதலைவரிடம் நேரில்மனு கொடுத்துள்ளார். இந்த மனுவைபெற்று கொண்ட அவர் ஆவண செய்வதாக வாக்களித்துள்ளார்.


