கருங்குளம் ஒன்றியம் கால்வாய் கிராமத்தில் ரேசன் கடை கட்டிடம் புதிதாக கட்டிட வேண்டும் என ம.தி.மு.க கருங்குளம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுடலை மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
கருங்குளம் ஒன்றியம் கால்வாய் கிராமததில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்குள் ரேசன் கடை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மிக மோசமான நிலையில இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மக்கள் பொருள் வாங்கும் போதே அவர்கள் மீது இடிந்து விழுந்து உயிர் பலி வாங்கும் அபாயமும் உள்ளது.
இவ்வூரில் உள்ள பஸ் நிலையமும் இடிந்து விழுந்து விட்டது. இதனால் பொதுமக்கள் வெயில் மழைக்காலங்களில் பயன்படுதத முடியாத நிலையில் உள்ளனர். எனவே கால்வாய் கிராமத்துக்கு புதிய ரேசன் கடை கட்டிடம் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைத்து வரவேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.