செய்துங்கநல்லூர் அருகே கால்வாய் மாதாங்கோயிலை சேர்ந்தவர் உலகமுத்து (40). இவரது மனைவி கோகுலத்தாள் என்ற இசக்கியம்மாள்(32). இவர்களுக்கு இசக்கியம்மாள், இசக்கிதுரை என்ற இரு குழந்தைகள் உள்ளன. உலகமுத்து, கோகுலத்தாள் என்ற இசக்கியம்மாளை பிரிந்து மற்றொரு பெண்ணுடன் திருப்பூரில் தனிக்குடித்தனம் செய்து வருகிறார். இதனால் மனமுடைந்த கோகுலத்தாள் மகளை நாசரேத் ஹாஸ்டலிலும், மகனை பாளையங்கோட்டை ஹாஸ்டலிலும் படிக்கவைத்துள்ளார். தானும் செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில் கணவன் தன்னோடு இல்லையே என அடிக்கடி புலம்பிக்கொண்டே இருப்பாராம்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் இவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் போலிசார் அவரைமீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


