ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகின்றார். அவர் தொடர்ந்து 2 வது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் திறந்தவெளி வேனில் பேசுகையில், இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த மக்கள் விவசாயத்தையை நம்பி உள்ளனர். ஆனால் விவசாய பகுதிகளுக்கு செல்வதற்கு உள்ள பாலங்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதனை நான் வெற்றி பெற்றவுடன் சீரமைத்து தருவேன் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.