கருங்குளம் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் 24 ந்தேதி இன்று நடைபெறுகிறது.
73வது அரசியல் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த நாளான ஏப்ரல் மாதம் 24ம் நாளில் முக்கியத்துவத்தை கிராமப்புற மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்று தேசிய ஊராட்சிகள் தினமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொண்டாடுமாறும், அன்றைய தினம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்திடுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராம ஊராட்சிக்கான வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி நிதியினை முறையாக பயன்படுத்துவதற்கான வழி வகைகளை கண்டறிதல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஏற்படுத்துதல், கிராமத்தில் வளர்ச்சியில் மகளிரின் பங்கு குறித்து விவாதித்தல், சுகாதாரம் மற்றும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்துதல், மகளிருக்கான அதிகாரமளித்தல் மற்றும சமூக வளரச்ச்சி குறித்தும் இந்த கிராம சபை கூட்டத்தில் மக்களோடு ஆலோசிக்க வேண்டும் என கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, அனைத்து பஞ்சாயத்து எழுத்தருக்கு அறிவிறுத்தியுள்ளார்.
எனவே கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளிலும் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.