கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பொதுப்பணியாளர் சங்க கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர் உள்பட பலர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்த சங்கத்துக்கான தேர்தலுககான வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பழைய தலைவர் எபனேசர் தலைமையில் ஒரு அணியினரும், முருகன் தலைமையில் மற்றொரு அணியினரும் வேட்பு மனு தாககல் செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் 172 பேர் வாக்களிகக வேண்டும். ஆனால் வாக்காளர்களில் பலர் உயிரோடு இல்லை. சிலர் ஓய்வு பெற்ற பின்பும் வாககாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் சுமார் 17 பேரை காரணமின்றி நீக்கியுள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்படும் சதி. எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நீக்கி விட்டு தான் தேர்தல் நடத்த வேண்டும் என் முருகன் தலைமையிலான அணியினர் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.