செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் அம்மன் மற்றும் பெருமாள் கோயில் கொடைவிழா நடந்தது.
முதல் நாள் குடியழைப்பு நடந்தது. இரண்டாம் நாள் பெருமாள் கோயிலுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து மதிய கொடையும், இரவு வில்லிசை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மூன்றாவது நாள் இரவு அம்மன் கோயிலுக்கு குடியழப்பு நடந்தது. நான்காவது நாள் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின் கருங்குளம் பஜார் வழியாக வீதி உலா வந்து அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் கோயில் கொடைவிழா பின் துவங்கியது. இரவு சமாக்கொடை நடந்தது. நான்காவது நாள் படப்பு எடுக்கப்பட்டு திருவிழா முடிந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


