கருங்குளம் ஒன்றியத்தில் ஆணையாளராக பணியாற்றி வருபவர் கிரி. இவரது மகள்கள் கி. ரம்யா, கி. நித்யஸ்ரீ. இவர்கள் இருவரும் தூத்துககுடி அ.சீ.ரா.கலாநிதிகேதன் இசை பள்ளியில் கர்நாடக இசை பயின்று வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆசிரியரான நித்யா பத்மநாபனிடம் சங்கீதங்களை கற்று கொடுத்தார். இவர்களின் நிகழ்ச்சி தூத்துககுடி சிவன் கோயில் உள்பட பல பகுதியில் நடைபெறும். தற்போது சங்கீத மூம்மூர்த்திகளின் ஒருவரான முத்துசுவாமி தீட்சீதரின் 244 வது ஜோதி விழாவில் இவர்களது கீர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. எட்டயபுரத்தில் முத்து சுவாமி தீட்சீதரின் வளாகத்தில் இரண்டு நாள்கள் கி.ரம்யா, கி.நித்யாஸ்ரீ இவர்களுடன் ஹர்ஷவர்த்தினி கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சியை பல்வேறு மககள் கண்டு ரசித்தனர்.
அரகேற்றம் கண்ட கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் கிரியின் மகள்களை அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் பாராட்டினர்.