கருங்குளம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சண்முகையா வாக்குசேகரிப்பு. சென்ற இடமெல்லாம் ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.
ஒட்டபிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சண்முகையா வாக்கு சேகரித்தார். இவர் நேற்று காலை வசவப்பபுரத்தில் துவங்கி, சென்னல்பட்டி, கல்லடியூர், கீழப்புத்தனேரி, படுகையூர், முறப்பநாடு, பக்கப்பட்டி உள்பட பல இடங்களில் வாக்குசேகரித்தார். மாலை வசவப்பபுரம் அம்மன் கோயில் முன்பு பிரச்சாரத்தினை அவர் துவங்கினார். அதன்பின் வசவப்பபுரம் ஆர்.சி.கோயில் தெரு, திருமா நகர், பசும்பொன்நகர், இந்திரா நகர், அம்பேத்கார் நகர், சமத்துவபுரம், அனவரதநல்லூர், ஆழிகுடி, பொந்தன்பொழி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், நாட்டார்குளம், கொள்ளீர் குளம், வள்ளுவர் காலனி, கீழ நாட்டார்குளம், வி.கோவில் பத்து ஆகிய பகுதியில் அவர் வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். உதயசூரியனுக்கே எங்கள் வாக்கு என்று உறுதி அளித்தனர்.
அவர் மக்களிடையே பேசும் போது, திமுக தலைவர் அவர்களின் கரத்தினை வலப்படுத்த திமுகவிற்கு வாக்களியுங்கள். கடந்த 2 வருடங்களால நலத்திட்ட உதவிகள் கிடைக்காத ஊராக இந்த தொகுதி ஆகி விட்டது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். வல்லநாடு கிராம பஞ்சாயத்தினை பேரூராட்சியாக மாற்றி தருவோம். ஏற்கனவே எங்கள் தலைவர் தளபதி அவர்கள் கூறியபடியே வல்லநாடு மான்கள் சராணலாயத்தினை மேம்மை படுத்துவோம். தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் உள்ள மேலக்கால்வாய் கீழக்கால்வாய் ஆகியவை மேன்மை படுத்தப்படும். திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க அயராது பாடுபட்டு வருகிறோம். நமது தலைவர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சம உரிமை பெற்றுதந்தார். வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஓதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத ஓதுக்கீடு, ஆரம்பபள்ளியில் பெண்களை ஆசிரியராக நியமனம் செய்வது, கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு திட்டம், விதவை மறுவாழ்வு திட்டம், பெண் குழந்தைகள் திருமண உதவி திடடம் மகளிர் சுய உதவிகுழு என பல கொண்டுவந்தார். இதனால் பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றுவந்தார். அதே வழியில் நமது தலைவர் தளபதி அவர்கள் கூறியபடியே 50ஆயிரம்பெண்களுக்கு வட்டியில்லா கடன், 50லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை. 1 கோடி பேருக்கு சாலைப்பணியாளர் வேலை. கேஸ் விலை இறக்கம் , கேபிள் டிவி விலை இறக்கம் என அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஏழை எளிய மக்களுக்கு கடன் தள்ளுபடி திட்டம் , பெண்கள் அடமானம் வைத்த 5பவுன் நகை திருப்ப மானியம் உள்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்த கோரிக்கை நிறைவேற திமுகவிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அவர் பேசினார்.
அவருடன் கருங்குளம் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு மகராஜன், தெற்கு நல்லமுத்து, தூத்துக்குடி தெற்குமாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் துர்க்கை முத்து, வழக்கறிஞர் சங்கர், வேல்முருகன், ஆழ்வார்திருநகரி பார்த்தீபன், பக்கபட்டி முருகன், சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.