கருங்குளம் ஒன்றியத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
செய்துங்கநல்லூரில் த.மா.க. சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு வட்டார தலைவர் நயினார் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஐயப்பன், மீனவர் அணி மாவட்ட துணை தலைவர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மா.க கொடி யேற்றி, காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞரணி தலைவர் சுந்தர், நகர துணை தலைவர் பெரியசாமி, பொருளாளர் அய்யாக்குட்டி சீனி வாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூரில் உள்ள பரி.லூக்கா ஆலய வளாகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவில் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


