கருங்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனவரதநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் சக்திவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூக சேவகர் பிரகாஷ், சைல்டு லைன் லில்லி ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின் போது 6 முதல் 14 வயது வரை 5 பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டனர். மாணவர்களை ஜுன் மாதம் முதல் பள்ளியில் சேர்ந்து கல்வி பயில அறிவுரைகளையும் ஆலோசனையும் வழங்கினார். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மகாராணி ஆகியோர் செய்திருந்தனர்.