கருங்குளம் அருகே ஆடு நூதன ஆடு திருடன் கைது செய்யப்பட்டான்.
செய்துங்கநல்லூரையடுத்த கருங்குளம் பகுதியில் தொடர் ஆடு திருட்டு நடந்து வந்தது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசாருக்கு புகார் வரவே எஸ்.ஐ சதீஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று தாதன்குளம் ரயில் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாலிபர் ஒருவர் நிற்பதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்ததில் அந்த நபர் ஆடு திருடுபவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செய்துங்கநல்லூர் போலிசில் அவரை ஒப்படைத்தனர். விசாரனையில் அவர் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த நம்பி மகன் ஆண்டி(28) என தெரிய வந்தது.
இவர் ஆடு திருடுவதையே தொழிலாக கொண்டுள்ளார். எங்கேயாவது ஆடுகள் கும்பலாக நின்றால் அந்த ஆடுகளின் முகத்தில் ஈரத்துணியை போட்டு அவற்றை லோடு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்று விடுவாராம். காரணம் ஈரத்துணி போட்டால் ஆடு கத்தாது. இதுபோல் சில நாட்களுக்கு முன் தாதன்குளம் முருகன் என்பவர் வீட்டில் ஆடு திருடியதும் இவர்தான் என தெரியவந்தது. விசாரணைக்குபின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.