உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கருங்குளம் ஊராட்சி மன்றத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி பார்வையாளராக கலந்து கொண்டார். கருங்குளம் ஊராட்சி எழுத்தர் சோமு தீர்மானங்களை வாசித்தார்.
நெல்லை சந்திப்பில் இருந்து தோழப்பன்பண்ணை வரை கருங்குளம் கொங்கராயகுறிச்சி ஆற்றுப்பாலம் வழியாக நகரப்பேருந்து இயக்கக் வேண்டும், பேய்க்குளத்தில் இருந்து தோழப்பன்பண்ணை வரை கருங்குளம்- கொங்கராயகுறிச்சி ஆற்றுப் பாலம் வழியாக நகரப்பேருந்து இயக்க வேண்டும். கருங்குளம் அரசு மருத்துவமனையை தரம் உயரத்தி கூடுதல் கட்டிடமும், கூடுதல் பணியாளர்களும் நியமனம் செய்து தரவேண்டும்.
மருதூர் மேலக்கால் பாசனத்தில் பயன்பெறும் கருங்குளத்தைச் சுற்றியுள்ள நான்கு குளங்களையும் மராமத்து பணி செய்து தரவேண்டும்,
பெட்டைக்குளத்திற்கு தனிமதகு வாய்க்கால் அமைக்க வேண்டும், சுடுகாட்டுப் பாதையில் கட்டாமல் விடுபட்ட தடுப்புச் சுவரை கட்டித்தர வேண்டும், கருங்குளம் ரேசன் கடைக்கான புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12 ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் நலக்குழுவின் செயலாளர் ச.உடையார், பிரபாகரன், ஊராட்சி மன்ற ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.