கருங்குளம் அரசு மருத்துவர் முகம்மது ரிப்பானுக்கு விருது வழங்கப்பட்டது.
கருங்குளம் அரசு மருத்துவராக பணியாற்றி வருபவர் முகம்மது ரிப்பான். இவர் சிறந்த மயக்க மருந்து நிபுணர். கடந்த 2014&15 நிதி ஆண்டில் மிக அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்து வழங்கிய வகைக்கு இவருக்கு விருது வழங்கப்பட்டது.
இதற்கான விருதை தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு டாக்டர் ரிப்பானுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கேடஷ் வழங்கினார்.