கருங்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் பவித்ரோத்சவம் நடந்தது. தென் திருப்பதி என போற்றப்படுவது வகுளகிரி சேத்திரம் கருங்குளம் வெங்கிடாசலபதி கோயில். இந்த கோயிலில் பவித்ரோத்சவம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி முதல் நாள் மாலை 5 மணிக்கு புஷ்ப அங்கி சேவை, திருப்பவிரோத்சவம் துவக்க நிகழச்சிகள், அங்குரார்ப்பணம், மிருத்ஸங்கரணம், ஆவாஹனம், ராட்சா பந்தனம் ஆகியவை நடந்தது. இரண்டாம் நாள் காலை 8 மணிக்கு சயனாதி வாசம், நிரந்தர உறுப்பினர் குடும்ப சங்கல்பம் நடந்தது. 10.30மணிக்கு திருமஞ்சனம், திருப்பவித்ர மாலைப் பிரதிஷ்டையும் நடந்தது. மாலை 6 மணிக்கு பகவானுக்கு திருப்பவித்ரமாலை சமர்ப்பணமும் சாந்தி ஹோமங்கள், பூர்ணாஹீதி, கோஷ்டி நடைபெற்றது. இந்நிகழச்சியில் ஸ்ரீவைகுண்டம் தலத்தார் வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மூன்றாம் நாள் காலை 9 மணிக்கு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாஹீதி, கோஷ்டி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு ஹோமம், சகஸ்ர நாம அர்ச்சனை, கோஷ்டி நடைபெறும்.
நான்காவது நாள் காலை 9 மணிக்கு திருமஞ்சனம், ஹோமங்கள் பூர்த்தி நடைபெறும். மாலை 5 மணிக்கு மகா பூர்ணாஹீதி, கோஷ்டி, மாலை 5 மணிக்கு உற்சவர் உஞ்சல் நடைபெறும். மாலை 7 மணிக்கு புறப்பாடு, உற்சவர் ஆஸ்தானம் சேர்தல், மந்திராசட்தை சமர்பித்தல், பிரசாத விநியோகம் ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பவித்ரோத்ஸவ செயலாளர் கிருஷ்ணன் பொன்னு வெங்கடேசன் என்ற சின்ன கண்ணன், துணை பொருளாளர் நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


