கருங்குளத்தில் நம்பிக்கையின் பாலம் நிறுவனத்தின் சார்பாக மகளிர் தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, அறிவியல் கண்காட்சி ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
கலிங்கப்பட்டி விசுவாசிகள் சபை போதகர் டேவிட் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் ஜெபராஜ் வரவேற்றார். மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் மகளிர் முன்னேற்றம் குறித்தும் பேச்சு போட்டி நடந்தது. ஆசிரியர்கள் ஜெயலெட்சுமி, சந்தனமாரி, பியுலா கிரேஸ், ஊழியர்கள சந்திரபுஷ்பம், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக சேவகர் பென்சி மரகதம் நன்றி கூறினார்.