தூத்துக்குடி மாவட்ட இந்து அன்னையர் முன்னணி சார்பில் கருங்குளத்தில் மழை வேண்டி வடக்கு வாசல் அம்மன் கோயிலில் மஞ்சள் நீர் அபிசேகம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் சரோஜா தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் கலைசுதா, கருங்குளம் ஒன்றிய செயலாளர் சங்கரேஸ்வரி, சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவன்கோயில் முன்பிருந்து பெண்கள் மஞ்சள்நீர், பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். இந்த ஊர்வலம் அக்ரஹாரம் வழியாக வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலை வந்தடைந்தது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிவன் கோயில் பட்டர் குணசேகர், சேது மற்றும் உழவார பணியினர் கலந்து கொண்டனர்.