கருங்குளத்தில் நம்பிக்கையின் பாலம் சார்பில் பெற்றோர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தென்காசி திட்ட அமைப்பாளர் அம்பிகாபதி தலைமை வகித்தார். கலிங்கப்பட்டி போதகர் டேவிட் முன்னிலை வகித்தார். திட்டமேலாளர் ஜெபராஜ் வரவேற்றார். பெற்றோர்கள் விளையாட்டு போட்டி , மாணவ மாணவியர் நடனம், நாடகம் உள்பட கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜெயலெட்சுமி, சந்தன மாரி, பியூலா, சந்திரபுஷ்பம், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.