கருங்குளத்தில் திருமணமகாலில் 3000 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறப்பாக தொண்டுகள் செய்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா முப்பெரும் விழா நடந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் ஒய்வுபெற்ற நீதிபதி சிவகுமார் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள், செய்துங்கநல்லூர் காவல் துறை ஆய்வாளர் சோமன் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக தொண்டுகள் செய்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கிராம உதயம் இயககுனர் டாகடர் சுந்தரேசன், மேலஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமசாமி, ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
ஓய்வு பெற்ற பி.டி.ஓ வெங்கடாச்சாரியார், தன்னார்வ தொண்டர் முத்து ராஜ், நிர்வாக பொறுப்பாளர் இராமசந்திரன், பகுதி பொறுப்பாளர்கள் முருகசெல்வி, ஆறுமுகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.