
கருங்குளம் நம்பிககையின் பாலம் நிறுவனம் சார்பில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச பேக் மற்றும் சோப்பு வழங்கப்பட்டது.
கருங்குளத்தில் நம்பிக்கையின் பாலம் நிறுவனம் ஏழை மாணவ மாணவிகள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சுமார் 60 ஏழை மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களுககு தேவையான உணவு கல்வி உபகரண பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. தற்போது அவர்கள் பள்ளி செல்ல தேவையான ஸ்கூல் பேக மற்றும் சோப்புகள் வழங்கப்பட்டது. திட்டமேலாளர் ஜெபராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமுக சேவகி பென்சி, ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, சந்தனமாரி, பியுலா கிரேஸ் ஊழியர்கள் சந்திரபுஷ்பம், சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.