கருங்குளத்தில் நம்பிக்கையின் பாலம் சார்பாக மாணவ மாணவியருக்கு படம் வரைதல் போட்டி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். அதன்பின் படம் வரைதல் போட்டி நடந்தது. இதில் 50க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுககு பரிசு வழங்கப்பட்டது. சமூகசேவகர் பென்சி மரகதம், ஆசிரியர்கள் ஜெயலெட்சுமி, சந்தனமாரி, பியுலா கிரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


