கருங்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செண்பகசாரதா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லெட்சுமி வரவேற்றார். கருங்குளம் அரசு மருத்துவர் பௌலா மேரி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினார். கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 179 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருள் வழங்கப்பட்டது. வினாடி வினா நடத்தப்பட்டு அவர்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டது. மாரியம்மாள் நன்றி கூறினார்.