ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு பேருந்தில் தீவைத்த விபத்தில் பலியான மூதாட்டி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிஜேபி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் குப்புராமு கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் சாதாரண மக்களோடு வன்முறையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வன்முறையாளர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு பேருந்தை தீவைத்த எரித்த போது தீகாயம் கட்டு உயிரிழந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.