கருங்குளத்தில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை நடந்தது.
இதையொட்டி முதல் நாள் காலை 5 மணிக்கு தோத்திர ஆராதனை நடந்தது சபை ஊழியர் செல்வன் சிறப்பு செய்தி அளித்தார். இரண்டாம் நாள் இரவு 7.30 மணிக்கு ஆயத்த ஜெபக்கூட்டம் நடந்தது. சபை ஊழியர் ஜான்லீ ஜோசப் நடத்தினார். மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு பஜனை பிரசங்கம் நடந்தது. தாதன்குளம் டி.என்.டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா பிரசங்கத்தினை நடத்தினார். நான்காம் நாள் காலை 11 மணிக்கு அறுப்பின் பண்டிகை நடந்தது. சேகரகுரு செல்வமணி தேவ செய்தியளித்தார். இரவு 7 மணிக்கு கீரன்குளம் யோவான் பாகவதரின் பஜனை நடந்தது. ஐந்தாம் நாள் காலை 11 மணிக்கு 96 வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை கூட்டம் நடந்தது.
செய்துங்கநல்லூர் சேகர குரு டாக்டர் ஜேசுபாதம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாலை 6 மணிக்கு அசன பண்டிகை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சேகரகுரு செல்வமணி, சபை ஊழியர் ஜான்லீ ஜோசப் மற்றும் சபை மக்கள் நடத்தினர்.