வல்லநாடு அருகே பராமரிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே முறப்பநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் வள்ளி (72). இவரது மனைவி குருவம்மாள் (70). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் வயதான தம்பதியர் இருவரும் தங்களை பராமரிக்க ஆள் இல்லையே என்ற கவலையில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான தம்பதியர் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.