சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தி கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டுக்குழுவினரால் ரவிசிவா தலைமையில் சிறப்பு திருவாசகம் முற்றும் ஓதுதல் நடந்தது. இதில் சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சிகள் நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் பெருங்குளம் திருக்கைலாயபரம்பரை செங்கோல் ஆதீனம் 103வது குருமகாசந்நிதானம் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.