
கடம்பன் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக கடந்த 21 வருடம் பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவர் விளையாட்டு இயக்குனராக திருவாரூர் மாவட்டம் நெடுங்குளத்துக்கு பதவி உயர்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா கடம்பன் குளம் பள்ளியில் வைத்து நடந்தது. அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆசிரியர் ஆறுமுகம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியரை ஆதி திராவிடர் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைமை செந்தில் குமார், கல்வி புரவலர் கடம்பன்குளம் ஊசிக்காட்டான், வழக்கறிஞர் ரவி உள்பட பலர் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் ஆறுமும் ஏற்புரை வழங்கினார். பள்ளிக்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம் நினைவாக கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சயில் தமிழாசிரியர் முத்துகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.