தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதந்திர கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் சாலை தெருவில் உள்ள சங்க கட்டிடத்தில் வைத்து நடந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் கலீலூர்ரகுமான் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் அப்துல் ஜாபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.