ஏரல் நூலக வாசகர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஏரல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூலகமானது ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், இந்த நூலகம் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் திறக்கப்படாமல் பெரும்பாலாலும் பூட்டியே கிடப்பது வாசர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. காலை 9மணி முதல் மதியம் 12மணி வரையும், மாலை 3மணி முதல் இரவு 7மணி வரையும் திறந்திருக்கவேண்டிய நூலகம் பெரும்பாலான நேரங்கள் பூட்டியே கிடக்கிறது.
மேலும், நூலகத்தில் அரசின் விதிமுறைகளின்படி அனைத்து வகையான நாளிதழ்கள், வார இதழ்களும், பொதுஅறிவு புத்தகங்களும் சரியான முறையில் வாங்கி வைக்கப்படுவதில்லை. நூலகரின் அலட்சிய போக்கினால் மாணவர்கள், வாசகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
எனவே ஏரல் அரசு பொதுநூலகம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரிலுள்ள பொதுநூலகங்கள் காலை 9மணி முதல் இரவு 8மணி வரை தொடர்ந்து செயல்படுவதுபோன்று மாற்றி அமைத்திடவேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.


