காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏரலில் நாளை முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாளை 3ம் தேதி தமிழகம் தழுவிய ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்கம் தலைவர் தசரதபாண்டியன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் 3ம் தேதி நடைபெறும் வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து நாளை (3ம் தேதி) ஏரலில் முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.