செய்துங்கநல்லூர் அருகே உள்ள எஸ்.என்.பட்டி கோயில் கொடைவிழா நடந்தது.
முதல் நாள் குடியழைப்பு நடந்தது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இரண்டாவது நாள் மதிய கொடையும், இரவு வில்லிசை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மூன்றாவது நாள் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின் செய்துங்கநல்லூர் பஜார் வழியாக வீதி உலா வந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பின் தீர்த்த ஊர்வலம் கோயிலை அடைந்தது. அம்மன் கோயில் கொடைவிழா பின் துவங்கியது. இரவு சமாக்கொடை நடந்தது. நான்காவது நாள் படப்பு எடுக்கப்பட்டு திருவிழா முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.