எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தண்பொருநைத் தமிழ் செல்வர் பட்டம் காஞ்சி சங்கர மடத்தில் வழங்கப்பட்டது.
காஞ்சி மாவட்டம், காஞ்சி ஸ்ரீசங்கர மடம் வளாகத்தில் புலவர் வே.மகா தேவன் எழுதிய ‘நலமெல்லாம் நலகும் தாமிரபரணி’, தாமிரபரணி புஷ்கரச் செய்தி மடல் வெளியிட்டு விழா, மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ‘தண்பொருநைத் தமிழ் செல்வர்’ பட்டம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யா சுவாமிகள் நூல் மற்றும் மடலை வெளியிட்டும், விருதும் வழங்கினார். வேளாக்குறிச்சி இளைய ஆதினம், காஞ்சி திருவாவடுதுறை ஆதின தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் மணிவாசகம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் பேசினர். ஆதிநாரயணன் வரவேற்றார். தென்னேரிப்பட்டு பெரு.சம்பத் நன்றி கூறினார்.