கருங்குளம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் ஈச்சந்தா ஓடை பாலத்தினை சீர்செய்யுங்கள் என பெண்கள் முறையிட்டனர்.
கருங்குளம் ஒன்றியம் முருகன் புரம், ஈச்சந்தா ஓடை, காசிலிங்காபுரம், பூவாணி,ஆலந்தா உள்பட இடங்களில் பிரச்சாரம் செய்தார். ஈச்சந்தா ஓடையில் அவர் பிரச்சாரம் செய்யும் போது ராமலட்சுமி என்ற பெண் அவரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஈச்சந்தா ஓடைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வாக இருந்த போது 16 எஸ் என் ற அரசு பேருந்து இயங்கியது. தற்போது அந்த பேருந்து ஊருக்குள் வருவதில்லை . காரணம் ஊருக்கு வரும் வழியில் உள்ள பாலம் உடைந்து கிடக்கிறது. அந்த பாலத்தினை கட்டி தர காலம் தாழ்த்தி வரும் காரணத்தினால் பேருந்துகள் ஊருக்குள் வருவதில்லை. இதற்கிடையில் தற்போது பெண்கள் உள்ளபட பள்ளி குழந்தைகள் முருகன் புரத்தில் வல்லநாடு மலை பிரரேசத்தில் உள்ள காட்டு பகுதியில் உள்ள நாலு வழிச்சாலையில் சென்று பஸ் ஏற வேண்டியது உள்ளது. சில நேரம் பெண்கள் நகையை திருடர்களிடம் பறி கொடுக்க வேண்டியது உள்ளது. எனவே பாலத்தினை சீர் செய்து, முழு நேரமாக ஈச்சந்தா ஓடை க்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதே கோரிக்கையை அங்கிருந்த பெண்களும் வழியிருத்தினர்.
கிருஷ்ணசாமி பேசும் போது, தேர்தல் முடிந்தவுடன் பாலத்தினை சீர் செய்து பஸ் விட ஏற்பாடு செய்யப்படும். அதே போல் தேவேந்திர வேளாளர் என்று நம் பட்டியலை மாற்ற , நமது ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும் என்று அவர்பேசினார். அதன் பின் அவர் அங்கிருந்து காசிலிங்கபுரம்சென்றார். அவருடன் குபேந்திரபாண்டியன், பூவாணி தங்கராஜ் உள்பட பலர் வந்தனர்.