
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – சென்னை, மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு தொழில் சங்கம் (துடிசியா) இணைந்து, தூத்துக்குடி – துடிசியா அரங்கத்தில் வைத்து கீழ்க்கண்ட தொழில் மேலாண்மை பயிற்சிகளை நடத்த உள்ளது.
சிக்கன உற்பத்தி மேலாண்மை (20.03.2018 – மாலை 4 மணி முதல் 7 மணி வரை ), டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய விழிப்புணர்வு (21.03.2018 – 10 மணி முதல் மாலை 5 மணி வரை ), சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேலாண்மை (22.03.2018 – 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை), கிரெடிட்ட ரேட்டிங் (MSME) (22.03.2018 – 2 pஅ வழ 5 pஅ), நடைமுறை மூலதன மேலாண்மை (23.03.2018–10 யஅ வழ 1 pஅ), வரி மேலாண்மை () (23.03.2018– 4.30 நண்பகல் 8.30 வரை ), மாற்று எரிசக்தி முறைகள் (SOLAR ENERGY) (24.03.2018 – 10 மணி முதல் 1 மணி வரை ), அடிப்படை கணக்கியல் மற்றும் பதிவேடு பராமரிப்பு (TALLY) (24.03.2018 – 2 மணி முதல் 5 மணி வரை ).
இந்த பயிற்சிகளில் கலந்துகொள்ள கட்டணம் இல்லை. மேலும், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சிகளில் கலந்துகொள்ள / முன்பதிவு செய்திட உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். (துடிசியா, 4/158, ராம் நகர், எட்டையாபுரம் ரோடு, கே.டி.சி.டிப்போ அருகில், தூத்துக்குடி-2, போன்: 0461-2347005 / 9840158943).