இருசக்கர வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், இராமானுஜம்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் இ-ராமானுஜம்புதூரில் நடந்தது. முகாமை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்தார். விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சோபா வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி தமிழ்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேசுகையில்,
கல்லூரி மாணவ, மாணவியர் கல்வியோடு இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் மனோபாவத்தை பெற்றிட வேண்டும். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம். இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவ, மாணவியர் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும். இதில் அவர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ் மற்றும் ராமானுஜம்புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜாபாபு நன்றி கூறினார்.