இராமனுஜம்புதூரில் தூய்மை பாரத விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் இராமனுஜம்புதூரில் 13ந் தேதி துவங்கியது. ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் மைக்கேல் ராஜ் அந்தோணி, தூய்மை பாரத இயக்குனர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை உதவி திட்ட இயக்குனர் விநாயக சுப்பிரமணி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிள்ளிகுளம் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மாணவர்கள் சேரகுளம் இராமனுஜம்புதூர் பகுதியில் வீடு வீடாக சென்று தூய்மை பாரத இயக்கத்தினை பயனை விளக்கினர். இவர்கள் வீட்டுச்சென்ற பணியை அருகில் உள்ள பள்ளிமாணவ மாணவிகள் செயல் படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் இராஜாபாபு மற்றும் முனைவர் சோபா ஆகியோர் செய்திருந்தனர்.