இராமனுஜம்புதூரில் குடிதண்ணீர் அவசியத்தினை உணர்த்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச தண்ணீர் சேகரிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மழை நீர் உயிர் நீர், நீரின்றி அமையாது உலகு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் வீதி வீதியாக சென்றனர். இந்த பேரணிககு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமை வகித்தார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜாபாபு முன்னிலை வகித்தார். முனைவர்சோபா நன்றி கூறினார். இதில் தண்ணீர் சேகரிப்பு குறித்து துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.