தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் காமராஜர் விருது வழங்கப்பட்டது.
இதற்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளியில் வைத்து நடந்தது. இதில் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள இராமனுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு மேல்நிலை வகுப்பு படித்த முத்து செல்விக்கு வழங்கப்பட்டது. இந்த மாணவி அக்கவுண்ட் பிரிவில் 1200க்கு 1125 மதிப்பெண் பெற்று இருந்தார். இதற்கான பாரட்டு சான்றிதழையும் 20 ஆயிரம் ரொக்க பரிசையும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் வழங்கினார்.
உடன் ஆசிரியை காஞ்சனா, பிரியா ஆகியோர் இருந்தனர். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.


