இராமனுஜம்புதூரில் மிக மோசமாக உள்ள சாலையால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர்.
இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளி மிகப்பிரசித்தி பெற்றது. இங்கு சுமார் 350க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தொடர்ந்து வருடந்தோறும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு, பிளஸ் டூ தேர்வில் முழு தேர்ச்சி அடைந்த பள்ளியாக இந்த பள்ளி விளங்கி வருகிறது. இதற்கிடையில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் இந்த பள்ளி புதிய கட்டிடம் கட்டி அங்கு மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் இந்த கட்டிடத்துக்கு செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. இந்த சாலையில் கல் பரத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து கூட செல்ல முடியவில்லை. சைக்கிளில் வரும் மாணவிகளின் சக்கரத்தினை சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் பதம்பார்த்து விடுகிறது. எனவே இந்த சாலையை செம்மை படுத்தி தரவேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.