இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஏப்ரல் 10 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 10.04.2018 முதல் 23.04.2018 வரை தூத்துக்குடி மாவட்டம் உட்பட 14 மாவட்டத்தைச் சார்ந்தோருக்கு நடைபெறவுள்ளது. இதில் கீழ்கண்ட பணிகளுக்கு சோல்ஜர் டெக்னிக்கல் (SoldierTechnical) ;, சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன் (SoldierTechnical (Avm/Avn) , சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட் (Soldier Nursing Assistant), சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (Soldier General Duty), சோல்ஜர் கிளார்க் ஸ்டோர் கீப்பர் (Soldier Clerk/Store Keeper Technical), சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (Soldier Tradesman) ;பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளோர் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை; 25-03-2018 க்குள் நேரடியாக விண்ணப்பித்து 29.03.2018 க்குப் பின்னர் அனுமதிசீட்டு பதிவிறக்கம் செய்து அனுமதிசீட்டு மற்றும் விண்ணப்பத்துடன் பெரம்பலூர் விளையாட்டு அரங்கிற்கு நேரடியாக சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ். தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.


