ஆழ்வார்திருநகரி நூலகத்தில் உயர் கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது.
ஓய்வு பெற்ற ஸ்டேட் வங்கி மேலாளர் பெருமாள் தலைமை வகித்தார். நூலகர் சம்சுதீன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வணிக மேலாண்மை துறை விரிவுரையாளர் முருகேசன் வாழ்த்தி பேசினார்.
மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது மற்ற திறமைகளை எவ்வாறு வளர்த்து கொள்ள வேண்டும் என்பது பற்றி புரேஜக்டர் மூலம் விளக்கமாக கூறினார். நிகழ்ச்சியில் நூலகர்கள் கிருஷ்ண மூரத்தி, பொன்னையா, மீரான்யா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மக்தும் இர்பான், வரதராஜபுரம் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி கிளை நூலகர் சம்சுதீன் செய்திருந்தார்.