
நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான மாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கொடியேற்றத்தினை தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இதில், எம்பெருமானார் பேரருளாளர் ஜீயர் சுவாமிகள், கோவில் செயல்அலுவலர் விஸ்வநாத், ஸ்ரீவைகுண்டம் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பாவெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
கொடியேற்றத்தினைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி(புதன்கிழமை) கருடோத்ஸவமும், மார்ச் 4ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழாவும், 5ம் தேதி(திங்கட்கிழமை) தெப்பத்திருவிழாவும், அதனைத்தொடர்ந்து 6ம் தேதி(செவ்வாய்கிழமை) நம்மாழ்வார் ஆச்சார்யர்கள் தெப்பமும், 7ம் தேதி(புதன்கிழமை) மாசி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.