இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலை ஆழ்வார்திருநகரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் நுழைவு வாயிலில் அமைத்து நாற்காலிகளை வாசலில் போட்டுள்ளனர். இதனால் காலை 10 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்த அரசு ஊழியர்ளும், அதன்பின்பு வந்த பொதுமக்களும் அலுவலகத்திற்கு செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் நடந்த இந்த உண்ணாவிரதம் பொதுமக்களுக்கும் சார்பதிவாளர் ஊழியர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வீதம் அமைந்தது.