ஆழ்வார்கற்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கொங்கராயகுறிச்சியில் இயங்கி வருகிறது.
இந்த வங்கியின் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஆழ்வார்கற்குளம் மூக்கன், முத்தையா, மாடசாமி, கொங்கராயகுறிச்சி ஜாகீர் உசேன், அசுவதி, மரியம் ஆசியா,சரோஜா, ஆறாம்பண்ணை அய்யாத்துரை, சேக்அப்துல் காதர், மணக்கரையை சேர்ந்த கள்ளவாண்டன், ராமையா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். மனுபரீசிலனை முடிந்து அனைவர் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சங்கத்துக்கு தேவையான சங்க நிர்வாகிகள் 11 பேர் தான் தேவை . எனவே 11 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என தேர்தல் அதிகாரி தேவகுமார் அறிவித்தார்.