ஆழிகுடி தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழாவையொட்டி ஈரோடு சப்கலெக்டர் செந்தில் குமார் குடும்பத்தோடு நீராடி, யாகத்தில் கலந்துகொண்டார்.
தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர திருவிழா மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி 10 வது நாளை முன்னிட்டு மிக அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று கடகராசி காரர்கள் தாமிரபரணியில் குளிக்கும்நாள் என்பதால் அந்த ராசிக்குரியவர்கள் மிக அதிகமான பேர் தாமிரபரணி கரையில் கூடினர். முறப்பநாடு பகுதியில் கூட்டம் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் வாகனங்கள் வசவப்புரத்தில் இருந்து வல்லநாடு வரை மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் மெயின்ரோட்டில் இருந்து கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி செய்து தரப்பட்டிருந்தது . இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முறப்பநாடு போலிசார் போக்குவரத்தினை சீர்செய்தனர்.
ஆழிகுடியில் காலை முதல் சிறப்பு யாகம் நடந்தது. அதன்பின் தாமிரபரணிக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஈரோடு சப் கலெகடர் செந்தில் குமார் குடும்பத்தோடு கலந்துகொண்டார். அவர் தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு அதன்பின் நடந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டார். கிருஷ்ணாபுரம் கிரான்டிகஸ் நிறுவன உரிமையாளர் ஏ.எஸ். பால்ராஜ், டாக்டர் பாலசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டு வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி உள்பட பல வி.ஐ.பிகள் ஆழிகுடி தாமிரபரணி ஆற்றில் நீராடினர்.
கருங்குளத்தில் தசரா சென்று வந்த குழுவினர் மொத்தமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்று நீராடினர். இதனால் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைககப்பட்டிருந்தது.