ஆழிகுடியில் உள்ள ஆர்.சி. துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ரோமன் கத்தோலிக்கப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி பென்சிகர் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராபின் ஸ்டேன்லி வரவேற்றார். நு¬ரையீரல் மருத்துவர் டாக்டர் ராமநாத், ஆலயா அறக்கட்டளையின் கௌரி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பரையாற்றினார். மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் அதனைப்பராமரிக்க மாதம் 100 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. வட்டார கல்விஅலுவலர் பாலசுந்தரி, வடடார வளமைய மேற்பார்வையாளர் புஷ்பா,வாருங்கள் இறைவனைக்காணலாம் செல்வ அந்தோணி, ஊராட்சி மன்றத் தலைவி முருகேஷ்வரி தினேஷ், 10 வது வார்டு கவுன்சிலர் சுடலை முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.