ஜனாதிபதி விருது பெற்ற
ஜனாதிபதி விருது பெற்ற ஆறாம் பண்ணை முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் முகம்மது ஹனிபா மரணமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ஆறாம் பண்ணையைச் சேர்ந்தவர் முகம்மது ஹனிபா (வயது 64). இவர் கடந்த 1996 ல் 2006 வரை இரண்டு முறை ஆறாம் பண்ணை பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 முதல் 2016 வரை இருமுறை அவருடைய மனைவி அமீதா போட்டிப் போட்டு, அதிலும் வெற்றிபெற்று ஆறாம் பண்ணை பஞ்சாயத்துத் தலைவராக பணியாற்றினார். தற்போது இவர் நாகர்கோவில் அருகே உள்ள திருவிளாங்கோட்டில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று இரவு 10 மணிக்கு தீடிரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனாளிககாமல் இறந்தார். அவர் உடல் ஆறாம் பண்ணையில் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இவர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த போது ஆறாம்பண்ணைககு ஜனாதிபதி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அசாருதீன் என்ற மகனும், அஹ்கரா என்ற மகளும் உள்ளனர். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஆறாம் பண்ணை பஞ்சாயத்துத் தலைவர் சேக அப்துல்காதர் உள்பட உள்ளூர் பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
====