
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆறாம்பண்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆறாம்பண்னை கிளை நிர்வாகிகளின் பொதுக்குழுக் மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஆறாம்பண்ணை கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதன்முடிவில், கிளைத் தலைவவராக இப்ராஹிம், செயலாளராக அப்துல் ஹமீது, பொருளாளராக முஹம்மது முஸம்மில், துணைத்தலைவராக முஹம்மது காசிம், துணைச்செயலாளராக அபுபக்கர் சித்திக், மாணவரணி செயலாளராக முஹம்மதுசேக் அப்துல்லாஹ், மருத்துவர் அணி செயலாளராக முகம்மது ஜாகித் அப்ரிதீன் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபட்டனர்.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முடிவில், கிளைத்தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.